www.asiriyar.net

Thursday, 8 March 2018

மத்திய பாடத்திட்டத்தில் மாற்றம்: ஆலோசனைகள்வரவேற்பு

ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மத்தியப் பாடத் திட்டத்தை மாற்றி அமைப்பது தொடர்பாக இணையதளம் மூலம் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.



புத்தகப் படிப்புடன் வாழ்க்கைத் திறன்கள், அனுபவக் கல்வி, உடற்கல்வி, திறன் உருவாக்கம் ஆகியவையும் அவசியம். மாணவர்களின் மற்ற திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கில், பாடச்சுமையை குறைக்கும்படி, தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சிலிடம் (என்சிஇஆர்டி) வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம், கல்வியாளர்கள், பெற்றோர், மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள், நிபுணர்கள், பொதுமக்கள், பிரதிநிதிகள் மற்றும் இந்தப் பிரச்னையில் ஆர்வம் கொண்டவர்கள் ஆகியோரிடமிருந்து பாடத்திட்ட மாற்றம் குறித்த ஆலோசனைகள் வரவேற்கப்படுவதாக மத்திய மனிதள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து ஆலோசனைகளை தெரிவிக்க விரும்புவோர், தங்களது கருத்துகளை ட்ற்ற்ல்://164.100.78.75/ஈஐஎஐ என்ற முகவரிக்கு அனுப்பலாம். இதற்கான படிவத்தில் ஆன்லைன் மூலம் ஆலோசனைகளை சுருக்கமாகத் தெரிவிக்கலாம். ஆலோசனைகள் தெரிவிப்போர் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

சிபிஎஸ்இ மற்றும் என்சிஇஆர்டி ஆகியவற்றின் பாடத்திட்ட ஆவணங்களை ட்ற்ற்ல்://ஸ்ரீக்ஷள்ங்ஹஸ்ரீஹக்ங்ம்ண்ஸ்ரீ.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ஸ்ரீன்ழ்ழ்ண்ஸ்ரீன்ப்ன்ம்.ட்ற்ம்ப் ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ய்ஸ்ரீங்ழ்ற்.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ழ்ண்ஞ்ட்ற்ள்ண்க்ங்/ப்ண்ய்ந்ள்/ள்ஹ்ப்ப்ஹக்ஷன்ள்.ட்ற்ம்ப் ஆகிய இணையதள முகவரிகளில் பார்க்கலாம். சிபிஎஸ்இ மற்றும் என்சிஇஆர்டி ஆகியவை வெளியிட்டுள்ள ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான பல்வேறு பாடங்கள் தொடர்பான பொருளடக்கத்தை சமநிலை கொண்டதாக மாற்றியமைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment