www.asiriyar.net

Monday, 12 March 2018

'நீட்' நுழைவு தேர்வு பதிவு இன்று நிறைவு

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள்.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான, நீட் நுழைவு தேர்வு, மே, 6ல்,நடக்கிறது.

இத்தேர்வில் பங்கேற்க, பிப்., 9ல் விண்ணப்ப பதிவு துவங்கியது.மார்ச், 9ல் முடிவதாக இருந்தது. ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, கூடுதலாக மூன்று நாள் அவகாசம் தரப்பட்டது.அந்த அவகாசம், இன்றுடன் முடிகிறது. இன்று இரவு 11:30 மணியுடன், நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு நிறைவடைகிறது. தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம், நாளை இரவு 11:30க்கு முடிகிறது.

No comments:

Post a Comment