www.asiriyar.net

Tuesday, 6 March 2018

பிளஸ்2 ஆங்கிலம் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் : மாணவர்கள் மகிழ்ச்சி

பிளஸ் 2 ஆங்கிலம் முதல் தாள் தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது. தமிழ், ஆங்கிலத்தை போல் எல்லா தேர்வுகளும் எளிமையாக இருந்தால் நன்றாக இருக்கும், என மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


  திண்டுக்கல்லில் தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்ததாவது:

என்.இன்பேன்ட்சியா (செவன்த் டே பள்ளி, திண்டுக்கல்): எல்லா பகுதிகளிலும் கேட்கப்பட்ட கேள்விகள் மிகவும் எளிமையாக இருந்தன. ஓரளவுக்கு படித்தவர்களும் சுலபமாகமதிப்பெண்கள் பெற முடியும். சென்ற ஆண்டுகளில் கேட்கப்பட்டிருந்த கேள்விகள் அதிகம் கேட்கப்பட்டிருந்தன. நன்றாக படித்தவர்கள் ஆங்கிலம் முதல் தாளில் நுாற்றுக்கு நுாறு வாங்கலாம். இதே போல் எல்லா தேர்வுகளும் எளிமையாக இருந்தால் நன்றாக இருக்கும்.எம். கேசவராஜ் (டட்லி பள்ளி, திண்டுக்கல்): தமிழை விட ஆங்கிலம் முதல் தாள் தேர்வு எளிமையாக இருந்தது. அனைத்து கேள்விகளும் பாடப்பகுதியில் இருந்து தான் கேட்கப்பட்டன.

ஒரு மதிப்பெண் வினாக்கள்மட்டும் கொஞ்சம் சிந்தித்து எழுதும்படி இருந்தது. வராது என்று நினைத்த கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தன. ஓரளவுக்கு படித்தவர்கள்கூட 80 மதிப்பெண்கள் வாங்க முடியும்.வி.நாகலட்சுமி (அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பழநி): ஒரு மதிப்பெண் கேள்விகள் மிகவும் எளிதாக இருந்தன. 20 க்கு 20 மதிப்பெண்கள் கிடைக்கும். இதேபோல ஐந்து, பத்து மதிப்பெண்கள் கட்டுரை கேள்விகளும் முதல் பாடத்திட்டத்தில் இருந்தே கேட்கப்பட்டிருந்து. இரண்டு மதிப்பெண்கள் கேள்வியில் இலக்கணம் சற்று சிரமமாக இருந்தது.

ஓரளவிற்குபடித்த மாணவர்கள் கூட அதிக மதிப்பெண்கள் பெறும் வகையில் மிகவும் எளிமையாக பாடத்திட்டத்தில் இருந்தே கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.நன்றாக படித்த மாணவர்கள் 'சென்டம்' எடுக்கலாம். ஆங்கில முதல்தாளில் தோல்வி அடைய வாய்ப்பு இல்லை. அனைவருக்கும் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.---எம். பெத்த வண்ணஅரசு (முதுகலை ஆங்கில ஆசிரியர், அய்யலுார்): மிகவும் எளிமையான தேர்வு இது. சென்ற ஆண்டு தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகள் அதிகம் இடம் பெற்றுஇருந்தன. இலக்கணம், பாட வினாக்கள், பாட்டு பகுதி கேள்விகளுக்கு மட்டும் கொஞ்சம் சிந்தித்து எழுதும்படி இருந்தது. அப்படி எழுதியிருந்தால் நுாறு மதிப்பெண் வாங்குவது சுலபம். இந்த முறை ஆங்கிலத்தில் அதிக மாணவர்கள் இருநுாறுக்குஇருநுாறு வாங்கும் வாய்ப்பு உள்ளது, என்றார்.

No comments:

Post a Comment