மருத்துவ பட்டமேற்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு வரும் 25-ம் தேதி முதல் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்டி, எம்எஸ் பட்டமேற்படிப்பு மற்றும் பட்டய மேற்படிப்புக்கு (டிப்ளமோ) தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (நீட்) தகுதி பெறுபவர்களைக் கொண்டு நிரப்பப்படுகிறது.
தேசிய தேர்வுகள் வாரியம் 2018-19-ம் கல்விஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த ஜனவரி 7-ம் தேதி நடத்தியது. தமிழகத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் உட்பட நாடுமுழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படித்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் 1 லட்சத்து 28 ஆயிரத்து 917 டாக்டர்கள் நீட் தேர்வை எழுதினர். இந்த நீட் தேர்வின் முடிவுகளும், தரவரிசைப் பட்டியலும் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் எம்டி, எம்எஸ், டிப்ளமோ மற்றும்எம்டிஎஸ் படிப்புகளுக்கு 50 சதவீத இடங்களுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு www.mcc.nic.in என்ற இணையதளத்தில் கடந்த17-ம் தேதி முதல் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். வரும் 24-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். 25, 26-ம் தேதி முதல் கட்ட இடங்கள் ஒதுக்கீடும், 27-ம் தேதி அதன் முடிவுகளும் வெளியிடப்படுகிறது.

This comment has been removed by the author.
ReplyDelete