ரிலையன்ஸ் நிறுவனம் பிக் டிவி என்கிற சேவையைத் தொடங்குகிறது. செட் டாப் பாக்ஸை இலவசமாகத் தருவதோடு, முக்கியமான ஹெச்டி சேனல்களை ஒரு வருடத்துக்கு இலவசமாகவும் தரவுள்ளது.
இது குறித்து கொடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், "ரிலையன்ஸ் பிக் டிவி ஒரு புதிய விடியலின் ஆரம்பமாக, இந்தியர்கள் அவர்களது தொலைக்காட்சி பெட்டிகள் மூலம் பொழுதுபோக்கை நாடிய விதத்தை மாற்றவுள்ளது. புதன்கிழமை முதல், ரிலையன்ஸ் பிக் டிவியின் சலுகையோடு பொழுதுபோக்கு இலவசமாகக் கிடைக்கவுள்ளது.
ஒவ்வொரு இந்திய வீட்டிலும் உயர் தர பொழுதுபோக்கு கிடைக்கும். நவீன ஹெச்டி செட் டாப் பாக்ஸுடன், மாணவர்கள் கல்வி ரீதியான விஷயங்களை இலவசமாக பார்க்கலாம்" என்று ரிலையன்ஸ் பிக் டிவி பிரிவின் இயக்குநர் விஜேந்தர் சிங் குறிப்பிட்டுள்ளார்.
ரிலையன்ஸின் இந்த சலுகை மூலம், பல கட்டண சேனல்களை (ஹெச்டி சேனல்கள் உட்பட) ஒரு வருடத்துக்கு இலவசமாகப் பார்க்கலாம். இலவச ஒளிபரப்பில் இருக்கும் 500க்கும் மேற்பட்ட சேனல்களும் ஐந்து வருடத்துக்கு இலவசமாகக் கிடைக்கிறது. இது பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா கனவையொட்டிய திட்டம் என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment