www.asiriyar.net

Friday, 9 February 2018

ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர், முகையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள், 
இடைநிலை ஆசிரியர்கள் பினாமியாக ஆட்களை நியமித்து மாணவர்களுக்கு பாடம் நடத்துவது, விருப்பத்துக்கு ஏற்றார்போல் பணிக்கு செல்வது போன்ற செயல்கள் குறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதிவாணனுக்கு புகார்கள் சென்றது. 

இதையடுத்து அவர், முகையூர் ஒன்றியம் வடகரை தாழனூர் கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கடந்த 6ம் தேதி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பட்டதாரி ஆசிரியர்கள் 2பேர் சில நாட்களாக பணிக்கு வராமலும், வருகை பதிவேட்டில் கையொப்பமிடாமலும் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து பட்டதாரி ஆசிரியர்கள் சந்தோஷ்குமார், ஜான்சன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் இதுகுறித்து 7 நாட்களில் விளக்கம் அளிக்க தலைமையாசியர் ஜெயபதிக்கு விளக்க குறிப்பாணை அளிக்கவும் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment