www.asiriyar.net

Thursday, 8 February 2018

சென்னையில் சி.இ.ஓ.,க்கள் கூட்டம்

பொதுத் தேர்வுகளை தில்லுமுல்லு இல்லாமல் நடத்துவது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க் களுக்கு, இன்று வழிகாட்டுதல் கூட்டம், சென்னையில் நடத்தப்படுகிறது.


தமிழகத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பொதுத் தேர்வுகளை சுமுகமாக நடத்தி முடிக்க, தேர்வுத் துறை சார்பில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இது குறித்து,மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, இன்று காலை, சென்னை, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், வழிகாட்டுதல் கூட்டம் நடக்கிறது. இதில், பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன், முதன்மை செயலர், பிரதீப் யாதவ், இயக்குனர்கள், இளங்கோவன், வசுந்தராதேவி மற்றும் இணை இயக்குனர்கள் பங்கேற்கின்றனர்.

No comments:

Post a Comment