www.asiriyar.net

Wednesday 21 February 2018

அரசு பள்ளியில் புகுந்து மர்ம நபர் துணிகரம் : தலைமை ஆசிரியையிடம் செயின் பறிப்பு!!!

திருவள்ளூர் அருகே, அரசு பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர், தலைமை ஆசிரியை அணிந்திருந்த,
8 சவரன் தாலி செயினை பறித்து தப்பியோடினான்.

அவனை பிடிக்க முயன்ற மாணவன் மீதும் தாக்குதல் நடத்தினான்.திருவள்ளூர் மாவட்டம், மேல்நல்லாத்துாரைச் சேர்ந்த கிரிதரன் மனைவி சுஜாதா, 42. குண்ணத்துார், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியை.இவரும், இவருடன் பணிபுரியும் மற்றொரு ஆசிரியையும், நேற்று முன்தினம் மாலை, பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்தனர்.குறும்படம் : அப்போது, டிப் - டாப்பாக உடையணிந்து, பள்ளிக்கு வந்த மர்ம நபர், நேராக தலைமை ஆசிரியை சுஜாதா, பாடம் நடத்திக் கொண்டிருந்த வகுப்பறைக்கு சென்றான். அவனை பார்த்த சுஜாதா, 'யார் நீங்கள்... என்ன வேண்டும்?' எனக்கேட்டார். அதற்கு, அந்த நபர், 'நான், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அனுமதியுடன் வந்துள்ளேன். மாணவர்களுக்கு கல்வி குறித்து விழிப்புணர்வுஏற்படுத்தும் வகையில், பள்ளியில் குறும் படம் திரையிட வேண்டும்'என்றான். அத்துடன், 'குறும் படம் திரையிட, 'டிவி' எடுத்து வர வேண்டும்; அதற்கு, 150 ரூபாய் கொடுங்கள்' என, கேட்டுள்ளான்.சந்தேகம் : அவனின் பேச்சில் சந்தேகமடைந்த தலைமை ஆசிரியை, பள்ளியில் உள்ள தன் அறைக்கு வேகமாக சென்றார்.

அவரை பின்தொடர்ந்த மர்ம நபர், 'மேடம், என் மொபைல் போன் எண்ணை குறித்துக் கொள்ளுங்கள்' என கூறியபடியே, சுஜாதா அணிந்திருந்த, 8 சவரன் தாலி செயினை, திடீரெனபறித்தான். சுதாரித்த தலைமை ஆசிரியை சுஜாதா, நகையை தன் கைகளால் பிடித்தபடி, 'திருடன் திருடன்...' என, கூச்சலிட்டார். அவரின் அலறலைக்கேட்ட, 4ம் வகுப்பு மாணவன், விஷ்ணு, மர்ம நபரின் சட்டையை பிடித்து இழுத்து, கீழே தள்ள முற்பட்டான்.உடன் ஆத்திரமடைந்த மர்ம நபர், மாணவனை எட்டி உதைத்து, சுஜாதாவின் செயினை பறித்து வெளியே ஓடி, அங்கு நிறுத்தி வைத்திருந்த, இரு சக்கர வாகனத்தில் தப்பினான்.அவன் இரு சக்கர வாகனத்தில் தப்ப முயன்ற போது, தடுத்த ஒரு பெண்ணையும் கடுமையாக தாக்கினான். இந்தச் சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து, மப்பேடு போலீசில், தலைமை ஆசிரியை சுஜாதா, நேற்று புகார் அளித்தார்.போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபரை தேடி வருகின்றனர். வருத்தமாக உள்ளதுபள்ளிக்கு வந்த மர்ம நபர், தலைமை ஆசிரியையிடம் பேசிக் கொண்டிருந்தான். திடீரென ஆசிரியை சத்தம் போடவே, மர்ம நபரை பிடிக்க முயன்றேன். என்னை உதைத்து தள்ளி, தப்பிவிட்டான்.

அவனை பிடிக்க முடியாதது வருத்தமாக உள்ளது. எஸ்.விஷ்ணு 4ம் வகுப்பு மாணவன், குண்ணத்துார்ஆசிரியைகளுக்கு பாதுகாப்பில்லைதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியைகளுக்கு, உரிய பாதுகாப்பு இல்லை. பள்ளிக்கு செல்லும் போதும், பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பும் போதும், செயின் பறிப்பு திருடர்களால் பாதிக்கப்படுகிறோம். தற்போது, பள்ளிக்குள்ளேயே திருடர்கள் வந்துள்ளது, எங்களின் அச்சத்தை அதிகரித்துள்ளது.பெயர் தெரிவிக்க விரும்பாத ஆசிரியைதொடரும் வழிப்பறி : திருவள்ளூர் அருகே, வெள்ளவேடு காவல் நிலையத்திற்கு உட்பட்டது, திருமணம் கிராமம்.

இங்குள்ள அரசு பள்ளிக்குள், 2017 டிச., 18ல், புகுந்த மர்ம நபர், ஆசிரியை ருக்மணி என்பவரிடம், ஐந்தரை சவரன் நகையை பறித்து சென்றான். அந்தக் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல், போலீசார் திணறும் நிலையில், இரண்டாவது முறையாக, இச்சம்பவம் நடந்துள்ளது.

No comments:

Post a Comment