www.asiriyar.net

Friday, 23 February 2018

இன்னும் 4 நாட்களில் டவர் பிரச்சனை சரியாகிவிடும்; கடன் மறுசீரமைப்பு பணிகளில் ஏர்செல் நிறுவனம்!

முடங்கிய  ஏர்செல் சேவை, 4 நாட்களில் சரியாகிவிடும் என்று தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.


தமிழகம், புதுச்சேரியில் ஏர்செல் டவர் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் டவர்கள் இயங்காததால், சிக்னல் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

இதனால் வியாபாரிகளும், அலுவலக ஊழியர்களும் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ஏர்செல் அலுவலகத்தில் சென்று பொதுமக்கள் முறையிட்டனர்.

ஆனால் அங்கு முறையான விளக்கம் கிடைக்கவில்லை. இதையடுத்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில் மேற்கு தாம்பரம் பகுதி ஏர்செல் அலுவலகம் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்நிலையில் முடங்கியுள்ள ஏர்செல் சேவை 4 நாட்களில் சரியாகிவிடும் என்று தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment