www.asiriyar.net

Thursday, 22 February 2018

இன்று பிளஸ் 2 மாணவர்களுக்கு 'ஹால் டிக்கெட்'

பிளஸ் 2 பொதுத் தேர்வு மாணவர்களுக்கு, பள்ளி களில், இன்று முதல், ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது. தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச், 1ல், பொது தேர்வு துவங்குகிறது. 


தமிழகம், புதுச்சேரியில், 8.66 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், தேர்வுத்துறையின், dge.tn.gov.in என்ற இணையதளத்தில், நேற்று ஹால் டிக்கெட்கள் வெளியிடப்பட்டன. 'தலைமை ஆசிரியர்கள், வரும், 26ம் தேதிக்குள், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து, மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.'பிப்., 26க்கு பின், ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்யும் வசதி கிடைக்காது' என, இயக்குனர், வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment