www.asiriyar.net

Wednesday, 14 February 2018

10 வகுப்பு: நாளை முதல் 'ஹால் டிக்கெட்'

தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத, தத்கல் உட்பட, ஆன்லைனில் விண்ணப்பித்த, தனித்தேர்வர்களுக்கு, நாளை, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்படுகிறது.
தேர்வர்கள், தங்களின் விண்ணப்ப எண், பிறந்த தேதியை குறிப்பிட்டு, http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். செய்முறை தேர்வு குறித்த விபரத்தை, தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி, தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment