நீங்க +1 , +2 BIOLOGY மாணவரா?
ஆம், என்றால் நீங்கள் NEET பற்றி விவரங்களை தெரிந்து கொள்வது அவசியம்....
மருத்துவம் படிக்க விரும்பும் +1 & +2 மாணவர்கள் அனைவரும் NEET தேர்வு எழுதாமல் MBBS அல்லது BDS பயில முடியாது .
பின்வரும் விவரங்கள் நீட் தேர்வு பற்றிய தெளிவான தகவல்களை அளிக்கும்...
நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் தங்களது +2 தேர்வில் PHYSICS ,CHEMISTRY மற்றும் BIOLOGY ல் 50% மேல் மதிப்பெண் பெற்றிருந்தாலே நீட் எழுத தகுதியாவார்.
நீட் தேர்வில் 180 கேள்விகள் கேட்கப்படும்.
180 கேள்விகளில் PHYSICS, CHEMISTRY, BOTANY மற்றும் ZOOLOGY ஆகியவற்றில் ஒவ்வொன்றிலும் 45 கேள்விகள் கேட்கப்படும்.
மொத்த கேள்விகளில் *52% கேள்விகள் +1 பாடத்திலும் 48% +2 பாடத்திலும் கேட்கப்படும்.
ஆகையால் +1 & +2 பாடத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
180 கேள்விகளில் 30% மிகவும் எளிதாகவும், 30% ஓரளவு கடினமாகவும் 40% மிக கடினமாகவும் கேட்கப்படும்.
ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 4 மதிப்பெண் வழங்கப்படும்.
அதே நேரத்தில் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 1 மதிப்பெண் குறைக்கப்படும்.
எனவே மாணவர்கள் கேள்விக்கான மிகச்சரியான பதில் தெரிந்தால் மட்டுமே விடையளிக்க வேண்டியது அவசியமாகும்.
உறுதியாக பதில் தெரியவில்லை என்றால் யூகத்தின் அடிப்படையில் பதிலளிக்க வேண்டாம்
அதே போல் தேர்வில் மாணவர்கள் OMR SHEETல் தங்களது பதிலை அளிக்கவேண்டும்.
மிக முக்கியமாக பதிலளிக்கும் போது அடித்தல் திருத்தல் இல்லாமல் முழுமையாக பதிலுக்கான வட்டத்தை நிரப்ப வேண்டும்.
மொத்த மதிப்பெண் 720 ல் 140 க்கு மேல் மதிப்பெண் எடுத்தால் அம்மாணவர் பிரைவேட் கல்லூரிகளில் PAYMENT SEAT பெற தகுதியானவராகிறார்.
அரசு கல்லூரிகளில் சேருவதற்கு 350 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும்.
தகவல்: CHANDRAYAAN EDUCATIONAL TRUST
No comments:
Post a Comment