www.asiriyar.net

Saturday, 13 January 2018

தொலைநிலை கல்வியில் 'ஆன்லைன்' கட்டணம்

தொலைநிலை கல்வி படிப்புக்கு, 'ஆன்லைனில்' கட்டணம் செலுத்தலாம் என, சென்னை பல்கலை அறிவித்துள்ளது.




சென்னை பல்கலையின் தொலைநிலை படிப்பில் சேரும் மாணவர்களிடம், வங்கிகள் வாயிலாக, கல்வி மற்றும் தேர்வு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில், பல நேரங்களில், உரிய நேரத்தில் கட்டணம் செலுத்த முடியாமல், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இதையடுத்து, 'ஆன்லைன்' கட்டண முறையை, சென்னை பல்கலை அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து, தொலைநிலை கல்வி பொறுப்பு இயக்குனர், கருணாநிதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'தொலைநிலை கல்வியில், ஏ 15, சி 16, ஏ 16, சி 17, ஏ 17 ஆகிய பிரிவுகளில் சேர்ந்துள்ள மாணவர்கள், இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டுக்கான கல்வி கட்டணங்களை, ஆன்லைனில் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள், www.ideunom.ac.in, www.unom.ac.in என்ற, இணையதளத்தில் கட்டணம் செலுத்தலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

1 comment: