சந்திரகிரகணத்து அன்று பெரிய நிலா, ரத்த நிலா, நீலநிற நிலா என மூன்றுவித நிலாவும் வானில் தோன்றும் அதிசயம்நாளை (ஜன., 31), அரங்கேற உள்ளது.ஆண்டுதோறும் அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் சூப்பர் மூன்(பெரிய நிலா) ஏற்படுவது வழக்கம்.
சூப்பர் மூன்
பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான சராசரி தொலைவை விட, குறைவாக இருக்கும் போது 'சூப்பர் மூன்' தோன்றுகிறது. அப்போது சாதாரணமாக தெரியும் நிலவை விட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் கூடுதல் ஒளியுடனும் தெரியும்.
* பூமிக்கும் - நிலவுக்குமான சராசரி துாரம் 3,84,400 கி.மீ. 'சூப்பர் மூன்' அன்று, இதைவிட குறைவானதுாரத்தில் நிலா இருக்கும்.
* சூரியனை பூமி சுற்றி வர 365.26 நாட்கள் ஆகிறது. அதே போல நிலவு, பூமியைச் சுற்ற 29.32 நாள் ஆகும். இந்தக் கணக்கீட்டு முறையில்பூமியின் ஒருபக்கம் சூரியனும், மறுபக்கம் நிலாவும் ஒரே நேர்கோட்டில் வரும்போது 'சூப்பர் மூன்' நிகழ்வு ஏற்படுகிறது.சந்திர கிரகணம்நிலவுக்கு தானாக ஒளி வெளியிடும் சக்தி கிடையாது. சூரிய ஒளியைத் தான் அது பிரதிபலிக்கிறது. சந்திர கிரகணம் என்பது, சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே பூமி வரும் போது ஏற்படுகிறது. இதனால் சூரிய ஒளி, நிலவில் படுவதை பூமி மறைத்து விடுகிறது. பூமியின் நிழல் தான், நிலவில் படுகிறது.
ரத்த நிலா
சந்திர கிரகணத்தன்று 'சூப்பர் மூன்' ஏற்படும் போது, நிலா, பூமிக்கு அருகில் வருகிறது. இதனால் சூரிய ஒளி, பூமியின் காற்று மண்டலத்தில் பட்டுச் சிதறுவதால், அதிக அலை நீளமுள்ள சிவப்பு நிறம், நிலவின் மேற்பரப்பில் பட்டுப் பிரதிபலிக்கும். அதனால் 'ஆரஞ்சு' நிறத்திலிருந்து ரத்தச் சிவப்பு வரையிலான நிறங்களில் நிலா தெரியும். இது 'ரத்த நிலா' என அழைக்கப்படுகிறது.
நீலநிற நிலா
மாதம் தோறும் ஏற்படும் இரண்டாவது பவுர்ணமி, 'நீலநிற நிலா' என அழைக்கப்படுகிறது. இது நீல நிறத்தில் தெரிவதில்லை. அறிவியல் வரலாற்று ரீதியாக இதற்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.
32
சுமார் 152 ஆண்டுகளுக்குப்பின் இந்நிகழ்வு நடக்கிறது என கூறப்படுகிறது. இது அமெரிக்காவுக்கு மட்டுமே பொருந்தும். உலகம் முழுவதற்குமானது அல்ல. ஆசியாவில் கடைசியாக இந்நிகழ்வு 1982 டிச., 30ல் ஏற்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் 32 ஆண்டுகளுக்குப்பின் இந்நிகழ்வு நடக்கிறது.
எங்கு தெரியும்
இந்தியாவில் நாளை(ஜன.31) மாலை 5 : 18 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்குகிறது. 6:21 முதல் இரவு 7:37 வரை முழு கிரகணம் இருக்கும்.இரவு 7:37 மணிமுதல் நிழல் விலக ஆரம்பித்து 8: 41 மணிக்கு முழுமையாக விலகி விடும். இரவு 9:38 மணிக்குப்பின் நிலவு அதன் முழு ஒளியுடன் ஜொலிக்கும்.
எப்படி பார்ப்பது?
இதற்குப் பாதுகாப்புக் கண்ணாடிகள் அணியவேண்டிய அவசியம் இல்லை. வெறும் கண்களால் பார்க்கலாம்.
சந்திர கிரகணம் பரிகாரம் யாருக்கு
நாளை (ஜன., 31) சந்திரகிரகணம் நிகழ்கிறது. இதையொட்டி யார் யாருக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்பது குறித்து பஞ்சாங்கங்களில் சொல்லப்பட்டுள்ளது. கிரகணம் முடிந்த பின் பரிகார பூஜை செய்யப்பட்டு கோயில்களில் நடை திறக்கப்படும். நாளை மாலை 5:16 மணிக்கு ஏற்படும் இந்த கிரகணம் இரவு 8:40 மணி வரை நீடிக்கிறது. கிரகணம் முடிந்த பின் நீராடி சந்திரனை தரிசனம் செய்வது நன்மையளிக்கும்.புதன் கிழமையில் பிறந்தவர்களும், புனர்பூசம், பூசம், ஆயில்யம், விசாகம், கேட்டை, பூரட்டாதி, அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் பரிகார அர்ச்சனை செய்ய வேண்டும்.
Ferrari Portofino stands with its sports stablemates ready to give them a run for their money.
ReplyDeleteferrari portofino price