www.asiriyar.net

Tuesday, 2 January 2018

பள்ளிகளில் இனி கல்வி நிகழ்ச்சிகள் மட்டுமே : அரசு உத்தரவு

தமிழகத்திலுள்ள அரசு துவக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இனி கல்வி நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்த அனுமதியளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அரசு செயலர் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில், கல்வி தொடர்பான நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், கருத்தரங்கள் நடத்த அனுமதிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும். மற்ற பொது நிகழ்ச்சிகள் நடத்த அனுமதியளிக்க கூடாது என, பள்ளி கல்வித்துறை அலுவலர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்.

கல்வி நிகழ்ச்சிகள் குறித்து, முன்கூட்டியே மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி கல்வி நிறுவனங்கள் அனுமதி பெற வேண்டும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டும், எனக் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment