தமிழ் உட்பட, 11 மொழிகளில், மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு, இம்மாத இறுதியில் எதிர்பார்க்கப்படுகிறது.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகள், பல்கலைகளில், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, மத்திய அரசின், 'நீட்' நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வைநடத்த, தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஆனால், மத்திய அரசின் சலுகை கிடைக்காததால், 2017ல், 'நீட்' தேர்வின்படியே, மாணவர் சேர்க்கை நடத்தும் நிலை ஏற்பட்டது.இந்நிலையில், இந்த ஆண்டு, 'நீட்' தேர்வை, தமிழகம் உட்படஎந்த மாநிலமும் எதிர்க்கவில்லை. இந்த தேர்வு, மே மாதம் நடக்க உள்ளது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட 11 மொழிகளில், வினாத்தாள் இருக்கும்.
தேர்வர்கள் விண்ணப்பிக்கும் போது, எந்த மொழி என்பதை குறிப்பிட்டால், அந்த மொழியில் வினாத்தாள் வழங்கப்படும். அதே மொழியில், விடைகளை எழுதலாம். இந்த தேர்வுக்கான அறிவிப்பு, இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என, சி.பி.எஸ்.இ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ReplyDeleteThe new Jaguar F-Pace also comes with two new safety technologies such as a camera- and radar-based alert system