www.asiriyar.net

Thursday 4 January 2018

10 மற்றும் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி குறைந்தது ஏன்? – அரசுப் பள்ளி ஆசிரியர்களை வருத்தெடுத்த ஆட்சியர்


திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்ததை அடுத்து, அந்தப் பள்ளியின் ஆசிரியர்களை ஆட்சியர் கந்தசாமி சரமாரியாக கேள்வி எழுப்பி எச்சரிக்கை விடுத்தார்.


▪ராந்தம் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி திடீரென ஆய்வு நடத்தினார். பின்னர் செய்யாறு அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார். அப்போது 12ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் ஏன் குறைந்தது என அவர் கேள்வி எழுப்பியதற்கு ஆசிரியர்கள் பல்வேறு காரணங்களை சுட்டிக் காட்டியதால் ஆட்சியர் ஆத்திரம் அடைந்தார். 6ஆம் வகுப்பில் இருந்தே முறையாக கற்றுக் கொடுத்து இருந்தால் 12ஆம் வகுப்பு மாணவனுக்கு ஏன் இந்த நிலை ஏற்படுகிறது என்று அவர் கடிந்து கொண்டார்.

▪ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை மட்டும் தனியார் பள்ளியில் சேர்த்து விட்டு விட்டு, அரசுப் பள்ளியில் பயிலும் குழந்தைகளை சரியாக கவனித்துக் கொள்வதில்லை என்று கூறிய அவர், இதனால் தான் தனியார் பள்ளிகள் அதிகரித்துக் கொண்டே செல்வதாகவும் கண்டித்தார். ஆசிரியர்கள் மனசாட்சியோடு நடந்து கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்தார்.

▪இதையைடுத்து செய்யாறு கல்வி மாவட்ட மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் 10, 11, 12 ஆம் வகுப்பில் கல்வியில்பின்தங்கிய மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விழிப்பணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரைப்பட நகைச்சவை நடிகர் தாமு கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கமளித்தார்.

No comments:

Post a Comment