www.asiriyar.net

Monday, 4 December 2017

மாணவர்களின் வான்வெளி சார்ந்த அறிவியல் தொழில் நுட்பம் சார்ந்த அறிவை பெருக்கிக்கொள்ள மாணவர்களின் பயன்பாட்டிற்க்காக துவக்கப்பட்டுள்ளது. Space Science technology gallery, VITM Bangalore.


இந்தியாவில் முதல்முறையாக Space Science technology gallery,  VITM Bangalore ல் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறை மற்றும் கலை பண்பாட்டுத்துறையின் மூலம் திறந்து வைக்கப்பட்டது.
இது குறித்த இரண்டு நாட்கள் வான்வெளி அறிவியல் தொழில்நுட்பம் குறித்த (Space Science and technology) Bangalore exposure education (BEE ) என்ற program Activity Educator நிறுவனம் மூலம் முதலில் பதிவு செய்யும் 20 கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு சமுதாய நோக்கோடு, வணிக நோக்கம் இல்லாமல் செயல்படுத்த முன்வந்துள்ளது.



இந்த நிகழ்வின் மூலம் மாணவர்கள் அடையும் பயன்:


1. வான் அறிவியல் தொழில்நுட்பம் குறித்த சர்வதேச அளவிலான அறிவை பெற இயலும்

2. உலக அளவில் அதிக வேலை வாய்ப்பு, அதிக சம்பளம்,  மற்றும் மதிப்பு வாய்ந்த தங்களது மேற்படிப்பை Space Science and technology , Aviation, Astronant, Aerospace, Astronomy, Aeronautical, Astro Physics,  போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெற உந்துதல் அடிப்படை அறிவு மற்றும் ஆர்வத்தை உண்டாக்கும்.


3. கற்றலுக்கான சிறந்த விழிப்புணர்வு நிகழ்வாக இருக்கும்

4. சுய கற்றல் ஆர்வத்தை மேம்படுத்தும்

5ஆராய்ச்சி அறிவை ஊக்கப்படுத்தும்.


கல்வி நிறுவனங்கள் பெறும் பயன்:

1, மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையுடன் தங்களது கல்வி நிறுவனத்தை இணைத்துக் கொள்ள முறையான பயிற்சிகள் வழங்கப்படும்

2. தங்களது கல்வி நிறுவனத்தில் அறிவியல் வள மையம் துவங்கி அதன் மூலம் தங்கள் பகுதியில் அறிவியல் விழிப்புணர்வு களப்பணி செயல் திட்டத்திற்கு மத்திய அரசின் அங்கீகார சான்று பெறுவதற்கும் தொடர்பணிக்கும் செயல் திட்டங்கள் கொடுப்பதன் மூலம் தங்களது நிறுவனம் நற்பெயர் ஈட்டும்

3 .உலகளாவிய அறிவியல் தொழில்நுட்பத்திற்கான அறிவு வளங்களை பகிர்ந்து கொள்ளும் அமைப்பாக செயல்பட வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்ள இயலும்.

4. மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பம், அறிவியல் பரப்புதல், அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் இவற்றிற்காக தேசிய விருது பெறும் வாய்ப்பு உள்ளது.


பதிவு செய்ய விரும்பும் கல்வி நிறுவனங்கள் கீழ்கண்ட முகநூல் பக்கத்தில் இது குறித்த விபரங்களை காணலாம்.

www facebook.com/groups/ISCOPE

Email முகவரி indiaiscope@gmail.com

கைபேசி எண்: 7892898919

No comments:

Post a Comment