நமது திருவண்ணாமலை மாவட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து அரசு துறைகளின் தொடர்பு எண்கள் மற்றும் வங்கிகள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், பத்திரிக்கை நிருபர்கள், மக்கள் பிரதிநிதிகள் வரை அனைத்து தொடர்பு எண்களும் தொகுத்து *Hello TIRUVANNAMALAI* என்ற பெயரில் இலவச செயலி மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது..
இந்த செயலியின் மூலம், *அனைத்து அரசு நலத்திட்டங்கள்* மற்றும் *திருவண்ணாமலை மாவட்ட நிர்வாக செய்திகளை* உடனுக்குடன் அறிந்து தெளிவுற்று பலன் பெறலாம். மேலும், *அரசு நலத்திட்டங்கள்* மற்றும் சுற்றுலா தளங்கள் குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
மேலும், *திருக்கார்த்திகை மகாதீபத் திருவிழாவிற்கு* வருகை தரும் பக்தர்கள் வசதிக்காக அன்னதான இடங்கள், வாகன நிறுத்துமிடம், தற்காலிக மருத்துவ முகாம்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் குறித்து *GPS* மூலம் அறிந்துக்கொள்ளலாம்.
மேலும், *தங்கள் பகுதிகளில் உள்ள அவசரகால கோரிக்கைகளை* இந்த செயலியில் உள்ள *GRIEVANCE INPUT* மூலம் மாவட்ட நிர்வாகத்தின் உடனடி கவனத்திற்கு கொண்டு சென்று நிவாரணம் பெறலாம் (அல்லது) *tvmcontrolroom@gmail.com* என்கிற ஈமெயில் முகவரியிலும் கோரிக்கைகளை அனுப்பலாம்.
இந்த செயலியை *Google Playstore* சென்று *Hello TIRUVANNAMALAI* என்று தட்டச்சு செய்து இந்த இலவச செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் அல்லது கீழே உள்ள Linkயை Click செய்து install செய்யவும்.
No comments:
Post a Comment