www.asiriyar.net

Friday, 8 December 2017

FLASH NEWS : JACTTO-GEO காலவரையற்ற தொடர் மறியல் போராட்டம் அறிவிப்பு!!!

*JACTTO-GEO போராட்ட அறிவிப்பு :
பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!

வணக்கம்.

☀ஜாக்டோ-ஜியோ மீதான வழக்கு விசாரணை டிசம்பர் 20-க்கு ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக் குழுக் கூட்டம் இன்று மதுரையில் நடைபெற்றது.

☀ *2009-ல் இருந்து* பெருத்த பாதிப்பைச் சந்தித்து இன்னலில் இருந்து வரும் *இடைநிலை ஆசிரியர்கள்* மாதந்தோறும் சுமார் *ரூ.14,500/- வரை இழப்பைச் சந்தித்து* வருகின்றனர். எனவே, *இடைநிலை ஆசிரியர்களுக்கான* ஊதிய முரண்பாடு குறித்த *ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி* ஜாக்டோ-ஜியோ சார்பாகவோ அல்லது கூட்டமைப்பில் உள்ள டிட்டோஜாக் உறுப்பு சங்கங்களின் சார்பாகவோ *வலிமையான தனித்த போராட்ட நடவடிக்கை மேற்கொள்ள* வலியுறுத்தி அனுமதி கோரப்பட்டது.

☀ஆனால், தனித்த கோரிக்கை கோருவதோ, தனிப்பிரிவாக நடவடிக்கையில் இறங்குவதோ, நீதிமன்றத்தில் தனித்து வழக்குப் போட்டுள்ளதோ கூட்டமைப்பிற்கு ஏற்புடையது அல்ல. எனவே, *கூட்டமைப்பின் ஒற்றுமையை கருத்தில் கொண்டு* இதுபோன்ற நடவடிக்கைகளில் *ஈடுபட வேண்டாமென* ஜாக்டோ-ஜியோ சார்பாக வலியுறுத்தப்பட்டதோடு,

*📢புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்தல்*

*📢இடைநிலை & முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டைக் களைதல்*

என்ற *இரட்டைக் கோரிக்கையை வலியுறுத்தி,*

*☀21.12.2017* வியாழன் அன்று,

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள *மாவட்ட ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள்,*

*⚡மாவட்டத் தலைமை நீதிபதி*களிடத்திலும்

*மாநில ஒருங்கிணைப்பாளர்கள்,*

*⚡சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி* / பதிவாளரிடத்திலும்

*☀முறையீட்டு மனு அளித்தல்☀*

மேலும்,

*30.12.2017-ற்குள் தமிழக அரசு* இக்கோரிக்கைகளை *நிறைவேற்றாவிடில்,*

*☀31.12.2017* ஞாயிறு அன்று *திருச்சியில்*

உரிமைப் போராட்டங்களில் நீதிமன்றங்களின் தொடர் தலையீடுகள் குறித்தும், தொடர் இயக்க நடவடிக்கை குறித்தும்,

*⚡ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளை அழைத்து,*

*☀கருத்தரங்கு நடத்துதல்☀*

இதனைத் தொடர்ந்து,

*☀சனவரி 4-வது வாரத்தில்* இருந்து,

*⚡ஜாக்டோ-ஜியோ*வின் அனைத்து உறுப்பு சங்கங்களும் மாவட்டம் வாரியாக *சுழற்சி முறையில்,*

*⚡சென்னையில்*

*☀காலவரையற்ற தொடர் மறியலில் ஈடுபடுதல்☀*

உள்ளிட்ட மூன்று கட்ட போராட்ட நடவடிக்கைகளை அறிவித்து முடிவாற்றப்பட்டுள்ளது.

☀மேலும், *கன்னியாகுமரியில் ஒகி புயலால் பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு நிதியுதவி* செய்வது எனவும் முடிவாற்றப்பட்டுள்ளது.

☀இன்றைய கூட்டத்தில் *ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினுள்,*
1. தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கம்
2. தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கம்
3. தமிழக பகுதிநேரத் தொழிலாசிரியர் முன்னேற்ற சங்கம்
உள்ளிட்ட *3 இயக்கங்கள் புதிதாக இணைந்துள்ளன.*

☀நீதிமன்றத் தலையீடுகள் உள்ள காலகட்டத்தில், ஜாக்டோ-ஜியோவின் மூன்று கட்ட போராட்ட நடவடிக்கைகளில் நமது இயக்கத் தோழர்களும் தீரத்துடன் கலந்து கொள்வதற்கான கள நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

*ஒன்றுபட்ட போராட்டம், வென்று காட்டும் நிச்சயம்.*

No comments:

Post a Comment