தமிழகத்தில், அனைத்து வகை பள்ளிகளின் தகவல்களை திரட்டும் நோக்கில், 2012ல், பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை (எமிஸ்) இணையதளம் கொண்டுவரப்பட்டது. இதில், மாவட்ட வாரியாக, பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின், அனைத்து வகை தகவல்களும் உள்ளீடு செய்யப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு மேம்படுத்தப்பட்ட எமிஸ் இணையதளம், அறிமுகம் செய்யப்பட்டது. சர்வர் குளறுபடி பிரச்னைகள் களைய, 32 மாவட்டங்களையும், இரண்டாக பிரித்து, கிழமை வாரியாக, பள்ளித்தகவல்கள், பதிவேற்ற அறிவுறுத்தப்பட்டது.
மேலும், சிறப்பு முகாம் அமைத்து, ஆதார் பதிவு இல்லாதோருக்கு, பிரத்யேக எண் பெற்று, எமிஸ் இணையதளத்தில், வரும் 31ம் தேதிக்குள், அப்டேட் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து மாவட்டங்களிலும், ஆதார் பதிவு பணிகள் நடக்கின்றன. 80 சதவீத அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஆதார் பதிவு பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'எமிஸ் இணையதள பதிவுப்படி, மாணவர்களுக்கு அளிக்கப்படும் பிரத்யேக எண் கொண்டு, அனைத்து வகை நலத்திட்ட பொருட்கள், கல்வி உதவித்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், முனைப்புடன் இப்பணியை மேற்கொள்கின்றன. மெட்ரிக், சி.பி.எஸ்.இ., --- ஐ.சி.எஸ்.இ., உள்ளிட்ட பள்ளிகளை, ஒருங்கிணைப்பதில் சிக்கல் நீடிப்பதால், எமிஸ் இணையதளத்தில் மேற்கொள்ளப்பட்ட, பணிகள் சார்ந்த விபரங்கள் திரட்ட இயலவில்லை' என்றார்.
No comments:
Post a Comment