www.asiriyar.net

Friday, 1 December 2017

இனி தான் இருக்கு மிக கனமழை : தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை



கன்னியாகுமரி அருகே வங்கடல் பகுதியில் உருவான ஒக்கி புயல் கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களை புரட்டிப் போட்டுள்ளது.

ஆனால் இதுவரை பெய்தது சாதாரண தான். இனி தான் மிக கடுமையான மழை இருக்கு என தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளது.


மழை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் இன்று காலை (9 மணியளவில்) புதிய அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.அதில் அவர் கூறியிருப்பதாவது : இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில், மிக அதிகபட்சமாக மணிமுத்தாறு அணைப்பகுதியில் 451 மி.மீ., மழை பெய்துள்ளது. 1992 ம் ஆண்டிற்கு பிறகு பெய்த மிக அதிகபட்ச மழைப்பொழிவு இது என்றே கூறலாம்.
புயல் சின்னம் லட்சத்தீவு நோக்கி நகர்ந்து சென்று விட்டது. விருதுநகர், தூத்துக்குடி, திண்டுக்கல் என ஏறக்குறைய அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்துள்ளது. மீண்டும் ஒரு கனமழை உள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடியில் இன்னும் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. பிற்பகலுக்கு பிறகு இதை விட இன்னும் அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மக்கள் கவனமாக இருக்கவும். சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.



பாபநாசம் அணை நிரம்பும் :

ஒக்கி புயல் கடந்து சென்று விட்டாலும் அதன் தாக்கம் காரணமாக இன்று பிற்பகலுக்கு பிறகு மற்றொரு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு மாவட்டங்களான திண்டுக்கல், தேனியிலும் அதிக மழை பெய்யும். தேனியில் பெரியாறு அணை பகுதியில் கனமழை பெய்யும். பாபநாசம், மணிமுத்தாறு, மாஞ்சோலை, கோதையாறு மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் மிக மிக கனமழை பெய்யலாம்.

இந்த மிக மிக கனமழை பெய்யும் என்பதால் பாபநாசம் அணை நிரம்ப வாய்ப்புள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவும் அதிகமாகும். காரைக்கால், கடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் புயலின் தாக்கத்தால் கனமழை பெய்யலாம். திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட உள்மாவட்டங்களிலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்ய கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்யலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment