www.asiriyar.net

Sunday, 17 December 2017

ஒரே ஆண்டில் 70 கோடி சம்பாதித்த 6 வயது சிறுவன்!!!



பொதுவாக சினிமாவிலோ, விளம்பர படத்திலோ நடிக்கும் சிறுவர்களுக்கு தான் அதிக சம்பளம் கிடைக்கும்.



ஆனால், ரியானின் பெற்றோர் கொஞ்சம் மாத்தி யோசிச்சிருக்காங்க. ரியானுக்கு 3 வயது இருக்கும் போது, விளையாட்டு பொம்மைகளை கொடுத்து, அதன் தரம், பயன்பாடு குறித்து விமர்சனம் செய்ய வைத்து வீடியோ எடுத்துள்ளனர். அதை யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்தனர். ரியானின் விமர்சனம் செம ரீச்சாகி விட்டது. இப்போது ரியானுக்கு 6 வயது. கடந்த ஓராண்டில் மட்டும் யூடியூப் விமர்சனம் மூலம் ரியான் 70 கோடி சம்பாதித்திருக்கிறார். போர்பஸ் பத்திரிகையின் இளம் தொழில்முனைவோர் பட்டியலில் ரியான் 8வது இடத்தில் உள்ளார். அவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்ற தகவல் ஏனோ ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment