www.asiriyar.net

Tuesday, 5 December 2017

பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு 7ம் தேதி தொடக்கம்

தமிழகத்தில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் இந்த ஆண்டுக்கான அரையாண்டுத் தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டது. 

மேலும், தேர்வுக்கான அட்டவணைகளையும் வெளியிட்டது. இதையடுத்து,  மேற்கண்ட வகுப்புகளுக்கு மாநிலம் முழுவதும் ஒரே கேள்வித்தாள்கள் இடம் பெற உள்ளன. தற்போது கேள்வித்தாள்கள் அச்சிட்டு மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி நடக்கிறது. இதையடுத்து நாளை மறுநாள் 7ம் தேதி தேர்வுகள் தொடங்குகிறது. இதையடுத்து பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு வரும் 7ம் தேதி தேர்வுகள் தொடங்கி 23ம் தேதியுடன் முடிகிறது. பத்தாம் வகுப்புக்கான தேர்வுகள் 11ம் தேதி தொடங்கி 23ம் தேதி முடிகிறது. அதற்கு பிறகு கிறஸ்துமஸ் விடுமுறை அறிவிக்கப்படும்.

No comments:

Post a Comment