அடுத்த 4 நாட்களுக்கான வானிலை அறிக்கையை
இந்திய வானிலை மையம் இன்று (டிச.,1) பிற்பகல் 1.30 மணியளவில் வெளியிட்டுள்ளது.
இதில், டிசம்பர் 5 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 2 ஆகிய நாட்களில் தமிழகம், கேரளா, லட்சத்தீவு, அந்தாமான் நிகோபார் தீவுகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அந்தமான் அருகே உருவாகி உள்ள புதிய காற்றழுத்தம் காரணமாக காற்றின் வேகம் மணிக்கு 110 முதல் 120 கி.மீ., வரை இருக்கும்.
லட்சத்தீவு மற்றும் கேரள கடலோர பகுதிகளில் கடல்சீற்றம் அதிகம் காணப்படும். இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். டிசம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டிசம்பர் 5 ம் தேதி ராயலசீமா பகுதியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment