www.asiriyar.net

Monday, 4 December 2017

டிசம்பர் 31-க்குள் இதை எல்லாம் நீங்கள் செய்தே ஆக வேண்டும்?

2017-ம் ஆண்டு முடிவதற்குள் மற்றும் 2018-ம் ஆண்டின் முதல் காலாண்டிற்குள்இதை எல்லாம் நீங்கள் ஆதார் எண் கொண்டு இணைக்க வேண்டும். சில சேவைகளுக்கு மத்திய அரசு 2018 மார்ச்31 வரை காலக் கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது.

ஆனால் பல சேவைகள் டிசம்பர் 31-க்குள் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். எனவே எந்தச் சேவைகளை எல்லாம் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் மற்றும் இணைக்கவில்லை என்றால் என்ன ஆகும் என்ற விவரங்களை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.பான் கார்டு பான் கார்டுடன் வருமான வரி இணையதளத்தில் ஆதார் எண்ணை டிசம்பர் 31-க்குள் இணைக்க வேண்டும். ஒருவேலை இணைப்பினை செய்யவில்லை என்றால் வருமான வரி தாக்கல் செய்ய முடியாது. வருமான வரி தாக்கல் செய்துள்ள விவரங்கள் செயல்படுத்தப்படாது.

2017-ம் ஆண்டு முடிவதற்குள் மற்றும் 2018-ம் ஆண்டின் முதல் காலாண்டிற்குள் இதை எல்லாம் நீங்கள் ஆதார் எண் கொண்டு இணைக்க வேண்டும். சில சேவைகளுக்கு மத்திய அரசு 2018 மார்ச் 31 வரை காலக் கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் பல சேவைகள் டிசம்பர் 31-க்குள் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். எனவே எந்தச் சேவைகளை எல்லாம் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் மற்றும் இணைக்கவில்லை என்றால் என்ன ஆகும் என்ற விவரங்களை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம். பான் கார்டு பான் கார்டுடன் வருமான வரி இணையதளத்தில் ஆதார் எண்ணை டிசம்பர் 31-க்குள் இணைக்க வேண்டும். ஒருவேலை இணைப்பினை செய்யவில்லை என்றால் வருமான வரி தாக்கல் செய்ய முடியாது. வருமான வரி தாக்கல் செய்துள்ள விவரங்கள் செயல்படுத்தப்படாது.

கிரெடிட் கார்டுகள் கிரெடிட் கார்டு சேவைகளைப் பயன்படுத்தி வருபவர்கள் தங்களது கிரெடிட் கார்டுகளை 2017 டிசம்பர் 31-க்குள் ஆதார்எண்ணுடன் இணைக்க வேண்டும். இல்லை என்றால் உங்களது கிரெட்ட் கார்டு சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படும்.காப்பீடு திட்டங்கள் காப்பீடு திட்டங்களில் முதலீடுசெய்துள்ளவர்களும் 2017 டிசம்பர் 31-க்குள் ஆதார் எண்ணுடன் பாலிசியை இணைக்க வேண்டும். இல்லை என்றால் தேவைப்படும் போது பாலிசியை அணுக முடியாது.

மியூச்சுவல் ஃபண்டுகள் / பங்குச் சந்தை பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வருபவர்கள் 2017 டிசம்பர் 31-க்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இல்லை என்றால் முதலீடுகளைத் தொடர முடியாது.வங்கி கணக்கு வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் அதனுடன் 2017 டிசம்பர் 31-க்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இல்லை என்றால் கணக்கு செயல்படாது.

பிபிஎப் / கிசான் விகாஸ் பத்ரா போன்ற சிறு சேமிப்புத் திட்டங்கள் பிபிஎப், கிசான் விகாஸ் பத்ரா, தேசிய சேமிப்புப் பத்திரம், சுகன்யா சம்ரிதி யோஜனா போன்ற சிறு சேமிப்பு திட்டங்களிலும் ஆதார் எண் இணைப்பினை செய்ய வேண்டும். இல்லை என்றால் முதலீடுகளைத் தொடர முடியாது.

எல்பிஜி மற்றும் பொது விநியோக திட்டங்கள் எல்பிஜி மானியம் மற்றும் பொது விநியோக திட்டங்களின் நன்மைகளைத் தொடர்ந்து பெற 2017 டிசம்பர் மாதத்திற்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இல்லை என்றால் மானியம் போன்றவை கிடைக்காது.

மொபைல் எண் மொபைல் எண் பயன்படுத்தி வருபவர்கள் அனைவரும் 2018 பிப்ரவரி 6-ம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இல்லை என்றால் சிம் கார்டிற்கான சேவைகள் துண்டிக்கப்படும்.

No comments:

Post a Comment