www.asiriyar.net

Friday, 29 December 2017

அசாம் : பணிக்கு 30 நிமிடம் முன்னதாக வர வேண்டும் - அரசு ஊழியர்களுக்கு உத்தரவு

 'அரசு ஊழியர்கள், அலுவலகத்துக்கு தாமதமாக வரும் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இனி, 30 நிமிடத்துக்கு முன்னதாகவே வர வேண்டும்' என, அசாம் அரசு உத்தரவிட்டு உள்ளது.

அசாமில், முதல்வர் சர்பானந்த சோனவால் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், முதல்வர் சோனவால் பேசுகையில், 'நம் நாட்டில், அசாமில் தான், சூரியன் முதலில் உதயமாகிறது. அரசு ஊழியர்கள், பணிக்கு முன்னதாகவே வர வேண்டும்.


'மக்களை காத்திருக்க வைத்திருக்கக் கூடாது; தாமதமாக வரும் கலாசாரத்தை மாற்றி, வருங்கால தலைமுறைக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்' என்றார்.

இந்நிலையில், அசாம் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில், அரசு ஊழியர்களின் பணி நேரம், காலை, 10:00 மணிக்கு பதிலாக, 9.30 மணிக்கே துவங்கும் என, முடிவெடுக்கப்பட்டது. 

பணி முடியும் நேரம், மாலை, 5.00 மணி என்பதில், எந்த மாற்றமும் இல்லை. இந்த மாற்றம், ஜன., 1 முதல் அமலுக்கு வருகிறது. அரசின் இந்த முடிவை வரவேற்றுள்ள அரசு ஊழியர் சங்கங்கள், 'இந்த உத்தரவை, ஊழியர்கள் மட்டுமின்றி, அதிகாரிகளும் பின்பற்ற வேண்டும்' என்றன.

No comments:

Post a Comment