www.asiriyar.net

Friday, 15 December 2017

தொலைநிலை படிப்புக்கு டிச., 30 வரை அவகாசம்

சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில் சேர, வரும், 30 வரை அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.
சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வி யில், இளநிலை, முதுநிலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்பில், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
இதற்கான, விண்ணப்ப பதிவு, www.ideunom.ac.in என்றஇணையதளத்தில், 'ஆன்லைன்' வழியாகவும், நேரடியாக பல்கலையின், ஒற்றை சாளர மையம் வழியாகவும் நடக்கிறது.

 'இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, வரும், 30 வரை விண்ணப்பிக்கலாம்' என, சென்னை பல்கலையின் பதிவாளர், சீனிவாசன் அறிவித்துள்ளார். சனி, ஞாயிற்று கிழமை களிலும், தொலைநிலை கல்வியின், ஒற்றை சாளர மாணவர் சேர்க்கை மையம் செயல்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment