ரேடியன் IAS வகுப்பில் வேறு மாநிலத்தவர் நமது மாநிலத்தில் TNPSC எழுதுவது குறித்த கேள்விக்கு நிறுவனர் திரு ராஜபூபதி அவர்கள் கூறிய பதில் நான் புரிந்து கொண்டது
வேறு மாநிலத்தில் இருந்து நமது மாநிலத்தில் TNPSC எழுதுவது புதிதானது அல்ல பல வருடங்களாக உள்ள ஒரு நடைமுறையே நாமும் உபி மபி டெல்லி என எங்கு வேண்டுமானலும் தேர்வு எழுதலாம் இதனால் நமக்கு பெரிய பாதிப்பில்லை இந்தியாவிலே அதிக இடஒதுக்கீடு உள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு 69% இடஒதுக்கீடு உள்ளது மீத 31% மட்டுமே வேறு மாநிலத்தவர் எழுத முடியும் அவர்கள் SC ST யாக இருந்தாலும் கூட OC யில் தான் எழுத முடியும் பல வருட நடைமுறையை இப்போது புதிதாக கண்டுபிடித்தாக கூறுகிறார்கள்
அவர்கள் GK 100 கேள்வியில் அண்ணா முத்துலட்சுமிரெட்டி சேர சோழ பாண்டியர் பெரியார் காமராஜர் ராஜாஜி வஉசி போன்ற தமிழக தலைவர்கள் பற்றியும் படித்தால் தான் அவர்கள் வெற்றி பெறமுடியும் தமிழர்களை அறிந்து கொள்ளட்டுமே தமிழக தலைவர்களை பற்றி சரியாக தெரிந்த நாம் ஏன் அவர்களுக்கு பயப்பட வேண்டும் தமிழக கேள்வி தெரியவிட்டால் ஒரு சில மார்க் களை இழக்க நேரிடும் OC குறைந்த இடங்கள் மட்டுமே உள்ளது இதில் தமிழக மாணவர்களை அதிக இடம் பிடிப்பர்கள்
அவர்களுக்கு ஒரு இடம் கிடைக்கும் இதற்கா பயப்படுவது. யாரும் tnpsc க்கு எதிராக வழக்கு போடாதீர்கள் வழக்கு போடுவது நாமே நமது தலையில் மண் அள்ளி போடுவது போல் result வராது tnpsc தான் ஜெயிப்பார்கள் உங்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை என tnpsc exam எழுத முடியாது யாரையும் நம்பாமல் படியுங்கள். TNTET தேர்வுக்கு வழக்கு தொடர்ந்ததால் 3 ஆண்டுக்கு மேல் பணியிடம் நிரப்பாமல் கிடந்தது. வழக்கு தொடர்கிறேன் என்ற பெயரில் பலரிடமும் பணம் பெற்று சிலர் பயன் பெற்றனர் கடைசியில் அரசு தரப்பே வெற்றி பெற்றது என்பதை அறிந்த யாரும் வழக்கு போடமல் படிப்பார்கள்
நன்றி
உங்களில் ஒருவன்
No comments:
Post a Comment