www.asiriyar.net

Wednesday, 1 November 2017

TNTET - தாள் 2 சான்றிதழ் சரிபார்ப்பில் 292 பேர் பங்கேற்கவில்லை.

மதுரையில் ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தாள் 2ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியருக்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிலும் 292 பேர் பங்கேற்கவில்லை.

ஜூலை 24 முதல் 28 வரை மதுரையில் நடந்த முதற்கட்ட சரிபார்ப்பில் 623 பேர்பங்கேற்கவில்லை. அவர்கள் சான்றிதழை இரண்டாம் கட்டமாக சரிபார்க்க அக்., கடைசி வாரத்தில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதன்படி முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து, தொடக்க கல்வி அலுவலர் ஜெயபால் முன்னிலையில் சரிபார்ப்பு பணி நடந்தது. இதில் 331 பேர் மட்டும் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment