இன்று இடைநிலை ஆசிரியர்கள் பலர் பெற்றுவரும் ரூ 500 மற்றும் பல ஆசிரியர்கள் பெற்றுவரும் ரூ 500,30,60 போன்ற இதரபடிகள் குறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் நிதித்துறையில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில்,(மாநில துணைப்பொதுச்செயலர் திரு சாந்தகுமார் அவர்கள் சென்று) விளக்கம் கேட்கப்பட்டது.
அப்படிகள் தொடர்கிறதா? ரத்து செய்யப்பட்டதா? அல்லது இரட்டிப்பாக்கப்பட்டதா? என விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு நிதித்துறை சார்பில் இது குறித்து அது அனுமதிக்கப்பட் விவரங்கள் கேட்கப்பட்டது.
அதற்கான விளக்கங்கள் அளிக்கப்பட்ட பின்- ஆம் அப்படிகள் குறித்தான தகவல்கள் அரசாணையில் விடுபட்டது உண்மையே என ஒப்புதல் தெரிவித்தனர்.மேலும் இப்படிகள் ஏதும் ரத்து செய்யப்படமாட்டாது என்றும் அவைகள் இரட்டிப்பாக்கப்பட வாய்ப்பு கள் அதிகம் எனவும் கூறினர்.
மேலும் இது குறித்து கல்வித்துறை சார்பில் குறிப்பாக தொடக்கக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட்டால் உடன் ஓரிரு நாளில் அரசாணையாக வெளியிடப்படும் என தெரிவித்தனர்.இத்தகவல் நமது மாநில பொதுச்செயலாளர் திரு செல்வராஜ் அவர்கள் மூலம் இயக்குனர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. விரைவில் ஆணை வெளிவரும்.
தகவல் கே.பி.ரக்ஷித்,
மாநில பொருளாளர்,தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி.
No comments:
Post a Comment