சாதாரண வெள்ளை பலகையை குறைந்த செலவில் interactive kit மூலம் ஸ்மார்டு போர்டாக மாற்றி பாடம் கற்பிக்கும் அரசுப் பள்ளி.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், குண்ணவாக்கம் நடுநிலைப்ப பள்ளியின் ஆசிரியர் ராஜீவ் குமார் அவர்கள், அவரின் பள்ளி நண்பர் திரு.ம.சீனிவாசன் M.E (U.S.A)அவர்களின் நிதி உதவியாலும், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அனைவரின் ஆலோசனைகள் மூலமாக *தொடுதிரை வசதி கொண்ட INTERACTIVE SMART BOARD* ஒன்றை அமைத்துள்ளார்.
சாதாரண 6 x 4 என்ற அளவு கொண்ட வெள்ளை பலகையை interactive smart kit மூலம் ஸ்மார்டு போர்டாக மாற்றி பாடம் கற்பிக்கின்றனர்.
இதன் மூலம் உயர்தர தனியார் பள்ளிகளில் பயிலும் வசதி மிகுந்த பிள்ளைகளுக்கு மட்டுமே கிடைக்கும் கல்வி முறையானது, நமது அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகளுக்கும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது.
இதன் மூலம் நாம் மொபைலில் பயன்படுத்தும் அனைத்து educational appகளை பெரிய திரையில் தொட்டு விளையாட்டு முறையில் கற்பிப்பதால் மாணவர்கள் ஆர்வமாக, கவனச் சிதறல் அடையாமல் கற்கின்றனர்.
இதில் உள்ள மென்பொருள் மூலம் கணித வடிவியல் கற்பித்தல், அறிவியலில் பட விளக்கங்கள் சார்ந்தவை மிக எளிதாக மாணவர்களுக்கு புரியும் வண்ணம் ஸ்மார்டு போர்டை பயன்படுத்தி கற்பிக்கின்றனர்.
ஸ்மார்டு போர்டில் மாணவர்கள் பல வண்ணங்களில் எழுதி ஆர்வமாக கற்கின்றனர்.
இத்தகைய கற்பித்தல் முறையால் அரசுப் பள்ளிகளின் தரம் உயரும் என்பதில் ஐயமில்லை.
தொடர்புக்கு,
ஆசிரியர் ராஜீவ் குமார்
9751521976
வாழ்த்துக்கள் ஐயா.இதை அமைப்பதற்கு எவ்வளவு செலவாகும் என்பதையும்,யார் இதனை அமைக்கத்தெரிந்தவர்கள் என்பதையும் தெரிவித்தால் எங்கள் பள்ளிலும் அமைக்க வசதியாக இருக்கும்.
ReplyDeleteஎன்னுடைய e-mail address
r.madhanagopalan@gmail.com
வாழ்த்துக்கள் ஐயா.இதை அமைப்பதற்கு எவ்வளவு செலவாகும் என்பதையும்,யார் இதனை அமைக்கத்தெரிந்தவர்கள் என்பதையும் தெரிவித்தால் எங்கள் பள்ளிலும் அமைக்க வசதியாக இருக்கும்.
ReplyDeleteஎன்னுடைய e-mail address
r.madhanagopalan@gmail.com