www.asiriyar.net

Thursday, 23 November 2017

BREAKING NEWS -முதல்வருக்கு இரட்டை இலை சின்னம்




*முதல்வருக்கு இரட்டை இலை சின்னம்*


*எடப்பாடி -ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்*


அதிமுகவின் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் அணி மற்றும் தினகரன் அணி ஆகியோரிடம் மதுரை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை அடுத்து தலைமை தேர்தல் ஆணையர் அக்சல்குமார் ஜோதி மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் அமர்வில் கடந்த மாதம் 6, 16, 23, 30, நவம்பர் 1, 6 மற்றும் 8-ம் தேதிகளில் ஏழு கட்டங்களாக விசாரணையை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

அதாவது சுமார் 300க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட வரைவு உத்தரவு தயார் செய்யப்பட்டு, அது ஆணையர்களுக்கு முதல் கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து அவர்கள் வரைவை சரிபார்த்து சில திருத்தங்கள் மற்றும் பரிந்துரைகளை வழங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில் மீண்டும் அந்த திருத்தங்களை செய்யும் பணி நடைபெற்று வந்தது.


இது முடிந்து, பின்னர் மறுபடியும் மூன்று தேர்தல் ஆணையர்களின் பார்வைக்கும் வரைவு உத்தரவானது அனுப்பி வைக்கப்பட்டு அவர்களின் முழு ஒப்புதல் கையெழுத்திற்கு பின்னர் உடனடியாக இரட்டை இலை வழக்கின் தீர்ப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதன் தீர்ப்பு தற்போது வெளியாகி, ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

No comments:

Post a Comment