www.asiriyar.net

Monday, 20 November 2017

புதிய பாடத்திட்ட வரைவு வெளியீடு

ஒன்றாம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வகுப்பு வரையிலான புதிய பாடத்திற்கான வரைவை முதல்வர் பழனிச்சாமி இன்று (நவம்பர் 20) வெளியிட்டார்.
தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளை மாணவர்கள் எளிதில் எதிர்கொள்வதற்காக புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய பாடத்திட்டம் வரும் 2018 ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக கல்வியாளர்கள், பேராசிரியர்கள், துணைவேந்தர்கள் உள்ளிட்ட 200 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. தற்போது புதிய பாடத்திட்டத்திற்கான வரைவு தயார் செய்யப்பட்டு, இன்று வெளியிடப்பட்டுள்ளது.
புதிய பாடத்திட்ட வரைவு www.tnscert.orgஎன்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பெற்றோர்கள், மாணவர்கள் இணையதளத்தில் புதிய பாடத்திட்ட வரைவை பார்த்து விட்டு கருத்து தெரிவிக்கலாம் என பள்ளி கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இணையதளத்தில் கருத்துக்களை பதிவு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment