www.asiriyar.net

Monday, 27 November 2017

தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

இன்றும், நாளையும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
. வங்க கடலின் தென் மேற்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தென் தமிழகம் மற்றும் வட மேற்கு மாவட்டங்களில், நிலை கொண்டுள்ளது.
இது, தென் மேற்காக நகர்ந்து, லட்சத்தீவு அருகே, அரபிக்கடலில் நுழைந்து வலுவிழக்கும் என, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், ஸ்டெல்லா கூறியதாவது:

தென் மாவட்டங்களில் குறிப்பாக, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், இன்றும், நாளையும் கனமழை பெய்யும். அதையொட்டிய, மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக, 29 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment