www.asiriyar.net

Sunday, 26 November 2017

மாணவர் விடுதிகளில்'பயோ மெட்ரிக்'

தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவியர் விடுதிகளில் 'பயோ மெட்ரிக்' முறை வருகைப்பதிவை அமல்படுத்த தேசிய ஆதி திராவிடர் ஆணைய துணைத்தலைவர்
முருகன் அறிவுறுத்தியுள்ளார்.

சிவகங்கையில் அவர் கூறியதாவது:தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சார்பில் 6 மாதங்களாக மாவட்டம்தோறும் பஞ்சமி நிலங்களின் பயன்பாடு குறித்தும், மத்திய - மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிய விதத்தில் கிடைத்துள்ளதா என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் முதலில் பஞ்சமி நிலங்கள் இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தாழ்த்தப்பட்டோர் சங்கங்கள் பஞ்சமி நிலங்கள் இருப்பதாக கூறியுள்ளன. அவற்றை கண்டறிந்து 2 மாதத்தில் அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளின் விடுதிகளில் சேர்ந்துள்ளவர்களின் எண்ணிக்கைக்கும், தங்கி இருப்போரின் எண்ணிக்கைக்கும் வித்தியாசம் உள்ளது.
இதில் உள்ள முறைகேட்டை கண்டறிய 'பயோமெட்ரிக்' பதிவுமுறை 'ஆதார்' எண்ணுடன் இணைத்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment