www.asiriyar.net

Friday, 17 November 2017

'வாசிப்பு திறனை வளர்க்கும் தினமலர் வழங்கும் பட்டம்'

திருப்பூர்: ''மாணவர்களின் வாசிப்புத் திறனை, 'தினமலர்'நாளிதழுடன் வெளியாகும், 'பட்டம், சிறுவர் மலர்' இதழ்கள் அதிகரிக்கின்றன,'' என, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இயக்குனர்கண்ணப்பன் பேசினார்.

'அனைவருக்கும் இடைநிலை கல்வி' திட்டத்தில், திருப்பூர் மாவட்ட நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானம், வளர்ச்சி பணிகள் குறித்து, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் கண்ணப்பன், நேற்று ஆய்வு நடத்தினார். ஒவ்வொரு பள்ளியாக சென்ற அவர், மாணவர்கள் மத்தியில் பேசினார்.திருப்பூர், நொய்யல் வீதி பள்ளியில், அவர் பேசியதாவது:முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கனவை நனவாக்க, அரசு பள்ளி மாணவர்கள், அரசு பணியில் சேர முயற்சிக்க வேண்டும். அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில், ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும்.

 பாடப் புத்தகங்கள் மட்டுமே, முழு அறிவுத் திறனை வளர்த்து விடாது; பாடப் புத்தகத்தை கடந்த அறிவு, அவசியம்.'தினமலர்' நாளிதழுடன் வெளியாகும், 'பட்டம், சிறுவர் மலர்' ஆகியவை மாணவர்களின் வாசிப்புத் திறனை வளர்க்கின்றன. இவற்றை மாணவர்கள், சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பள்ளி மாணவர் நலனுக்காக, 'புத்தக பூங்கொத்து' என்ற பெயரில், நுாலகங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதமான தலைப்பில் படிக்கும் புத்தகங்கள், அறிவை விரிவடைய செய்யும்.

இவ்வாறு அவர் பேசினார்

No comments:

Post a Comment