பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு பள்ளியிலும் சாரண, சாரணியர் இயக்கம் கட்டாயம் தொடங்கப்பட வேண்டும்.
இந்த இயக்கத்தில் குறைந்தது 12 பேர் கொண்ட முழுமையான சாரணர் குழுவை ஏற்படுத்த வேண்டும். இதற்காக பள்ளியில் ஆர்வம் மிக்க ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டு பயிற்சிகளுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
மாவட்ட அளவிலான பயிற்சிகள் வரும் 15ம் தேதி முதல் வழங்கப்படும். மாணவர்களுக்கு சிறப்பான வகையில் பயிற்சிகளை வழங்கி ராஜபுரஸ்கார் விருது பெறுவதற்கான நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment