www.asiriyar.net

Tuesday 7 November 2017

7 நாள் விடுமுறைக்கு பின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகள் திறப்பு

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகள் திறக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் 9 பள்ளிகளை தவிர மற்ற அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் என்று ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். 

திருவள்ளூர் மாவட்டத்தில் மழை நீர் தேங்கியுள்ள 12 பள்ளிகளை தவிர மற்ற அனைத்து பள்ளிகளும் இயங்கும் என்று ஆட்சியர் சுந்தரவள்ளி அறிவித்துள்ளார். இதே போல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 பள்ளிகளை தவிர மற்ற அனைத்து பள்ளிகளும் இயங்கும் மாவட்ட ஆடசியர் பொன்னையா அறிவித்துள்ளார். கனமழை காரணமாக 7 நாள் விடுமுறைக்கு பின்னர் இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை கடந்த 22ம் தேதி முதல் தமிழகத்தில் பெய்யத் தொடங்கியது. நாளுக்கு நாள் மழை வலுவடைந்து வந்ததால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யத் தொடங்கியது. இதனால் கடந்த 30ம் தேதி மதியமே மாணவர்களை பள்ளியில் இருந்து முன்னதாக வீட்டுக்கு அனுப்ப கலெக்டர்கள் உத்தரவிட்டனர்.

 இருப்பினும், தொடர்ந்து கனமழை பெய்து கொண்டே இருந்ததால், நவம்பர் 3ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின்னர் அந்த விடுமுறை நேற்று வரை நீட்டித்து அறிவித்தனர். இந்நிலையில், படிப்படியாக மழை குறையும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து இன்று முதல் பள்ளிகள் திறக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment