ஜாக்டோ - ஜியோ போராட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன், ஆசிரியர் சங்கங்களுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து நீதிபதியை விமர்சனம் செய்து சேலத்தில் நோட்டீஸ் அச்சடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக சேலம் டவுன் போலீசார், 26 ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் நேற்று, நீதிபதியை விமர்சித்து நோட்டீஸ் அச்சடித்த காரணத்திற்காக, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில ெபாதுசெயலாளர் கோவிந்தன், மாவட்ட செயலாளர் மாயகிருஷ்ணன் மற்றும் பொருளாளர் ஜான் பிரேம்குமார் ஆகிய மூவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment