www.asiriyar.net

Friday, 10 November 2017

ஆசிரியர்கள் 3 பேர் சஸ்பெண்ட்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே செல்லியம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகவும், பொறுப்பு தலைமையாசிரியராகவும் வேலை பார்த்தவர் லாரன்ஸ் எட்வர்டு. இவர் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து மாணவி ஒருவரின் தாய் கொடுத்த புகாரில் திருப்புத்தூர் மகளிர் போலீசார் லாரன்ஸ் எட்வர்டு மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். 

இதற்கிடையில் கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அதே பள்ளியில் ஆசிரியர்களாக வேலை பார்க்கும் மூவேந்திரன், சசிகுமாரி ஆகியோர் ஆசிரியர் லாரன்ஸ் எட்வர்டோடு 2 ஆண்டுகளாக மோதல் போக்கில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்தது. இந்நிலையில் 3 பேரும் கடந்த வாரம் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். தொடர் நடவடிக்கையாக நேற்று ஆசிரியர்கள் லாரன்ஸ் எட்வர்டு, மூவேந்தன், சசிகுமாரி ஆகியோரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மகேஸ்வரி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment