தென் தமிழகத்தை மிரட்டும் ஓகி புயல்...12 மணிநேரத்தில் வருகிறது - வானிலை மையம் எச்சரிக்கை
கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகி ஓகி புயல் உருவாகியுள்ளதாக
இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. குமரிக்கு தென்கிழக்கே 170கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. 12 மணிநேரத்தில் புயலாக மாற வாய்ப்பு உள்ளது. இந்தப் புயல் காரணமாக மணிக்கு 167 கிலோமீட்டர் முதல் 200 கிலோமீட்டர் வேகத்திற்கு காற்று வீசும். இது மிகத் தீவிர புயலாக மாறும் வாய்ப்பும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் சின்னம் காரணமாக அடுத்த 36 மணி நேரத்திற்கு தென்தமிழகத்தில் மிக கனமழை பெய்யலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை நீடிக்கிறது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக எண்ணூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. திருவொற்றியூர், எண்ணூர், காசிமேடு பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குள் மீனபிடிக்க செல்லவில்லை. தஞ்சை, நாகை, ராமநாபுரம், மாவட்ட கடலோரப் பகுதிகளிலும் கடல் சீ்றறம் இருப்பதால் அப்பகுதி மீனவர்களும் மீன்பிடிக்க செல்லவில்லை. கன்னியாகுமரி அருகே வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கு தென்கிழக்கே 170கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. புயல் சின்னம் காரணமாக அடுத்த 36 மணி நேரத்திற்கு தென்தமிழகத்தில் மிக கனமழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழக, தென் கேரள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இந்தப் புயல் காரணமாக மணிக்கு 167 கிலோமீட்டர் முதல் 200 கிலோமீட்டர் வேகத்திற்கு காற்று வீசும். இது மிகத் தீவிர புயலாக மாறும் வாய்ப்பும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. புயல் காரணமாக மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.
No comments:
Post a Comment