www.asiriyar.net

Tuesday, 14 November 2017

100 இடங்களில் நுழைவு தேர்வு இலவச பயிற்சி : முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்

சென்னை உள்பட, மாநிலம் முழுவதும், 100 இடங்களில், 'நீட்' உள்ளிட்ட நுழைவு தேர்வுக்கான, அரசின் இலவச பயிற்சி மையங்கள், நேற்று துவக்கப்பட்டன.முதல்வர் பழனிசாமி, பயிற்சி திட்டத்தை துவக்கி வைத்தார்.

மத்திய அரசின், 'நீட், ஜே.இ.இ.,' உள்ளிட்ட நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற, அரசு பள்ளி மாணவர்களுக்கு,தமிழக அரசின் சார்பில், இலவச பயிற்சி திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.நடவடிக்கை : முதற்கட்டமாக, சென்னை உட்பட, 100 இடங்களில், இந்த பயிற்சி துவக்கப்படுகிறது.

சென்னை கலைவாணர் அரங்கில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, 25 இடங்களில் பயிற்சியைதுவங்கி வைத்து, முதல்வர் பழனிசாமி பேசியதாவது:பள்ளிக்கல்வியில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.பொது தேர்வில் தரப்பட்டியல் ஒழிப்பு, எஸ்.எம்.எஸ்., வழியே தேர்வு முடிவு அறிவித்தல், பிளஸ் 1க்கு பொது தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக, 2,373 ஆசிரியர் காலியிடங்களை நிரப்புதல் என, பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுஉள்ளன.இந்த பயிற்சி திட்டத்தில், 73 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். சனி, ஞாயிற்று கிழமைகளில், காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை, பயிற்சி நடக்கும்.தேர்வு விடுமுறை மற்றும் பொது தேர்வு விடுமுறையில், தினமும் பயிற்சி வகுப்பு நடத்தப்படும். மொத்தம், 30 புத்தகங்கள் வழங்கப்படும்.

பயிற்சி வகுப்பு : இந்த பயிற்சிக்கு, 'ஸ்பீட் அகாடமி' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் யாரும், எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. முதலில், 100 மையங்கள் திறக்கப்படுகின்றன; பின், கூடுதலாக, 312 மையங்கள் திறக்கப்படும்.நாங்கள் தரும் இலவச பயிற்சியை பெற்று, நீங்களும் முயற்சித்து, மத்திய அரசின் எந்த தேர்வானாலும், அதில், தேர்ச்சி பெற வேண்டும்.இவ்வாறு அவர்பேசினார்.

பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், ''மத்திய அரசு எத்தனை நுழைவு தேர்வுகளை நடத்தினாலும், அதை தகர்த்தெறிந்து, தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில், இந்த திட்டத்தில் பயிற்சிஅளிக்கப்படும்.''வகுப்பில் மட்டுமல்ல, வீட்டிலும் பயிற்சி பெறும் வண்ணம், பயிற்சி வகுப்புகள் அடங்கிய, சி..,யும், மாணவர்களுக்கு வழங்கப்படும்,'' என்றார்.

துணை முதல்வர் பன்னீர்செல்வம், உயர்கல்வி அமைச்சர் அன்பழகன், பல்வேறு துறை அமைச்சர்கள், தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன், பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ், பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் மற்றும் அதிகாரிகள், மாணவியர் பங்கேற்றனர்.'ஜெட் வேகத்தில் கல்வித்துறை' - துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசுகையில், ''பள்ளி மாணவர்களுக்கு, 14 வகை நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அத்துடன், தற்போதைய போட்டி தேர்வு பயிற்சியும், மாணவர்களை முன்னேற்றும்.பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், ஜெட் வேகத்தில், துறையில் வளர்ச்சிபணிகளை மேற்கொண்டு வருகிறார்,'' என்றார்.

No comments:

Post a Comment