அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நியமனத்துக்குப் பயன்படுத்தப்படும் தகுதிகாண் மதிப்பெண் முறை குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
பள்ளிக் கல்வித் துறையில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.இதில் பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன், தொடக்கக் கல்வி இயக்குநர் செ.கார்மேகம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியது:- அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் தகுதிகாண் முறையில் உள்ள பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்யக் குழு நியமிக்கப்படவுள்ளது.இந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் முடிவுகள் மேற்கொள்ளப்படும். மாணவர்களின் மேம்பாட்டுக்கான புதிய திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment