www.asiriyar.net

Thursday, 12 October 2017

JIO going to announce the new diwali offer | ஜியோவின் தீபாவளி அதிரடி ஆஃபர்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் டெலிகாம் நிறுவனமான ஜியோ தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய ஆஃபரை ஜியோ தீபாவளி தண் தனா தண் பெயரில் வெளியிட உள்ளது. 


ஏற்கனவே ஜியோ நிறுவனத்தால் ஏர்டெல், ஐடியா, வோடாபோன் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான நஷ்டத்தைச் சந்தித்துள்ள நிலையில், ஜியோ தற்போது அறிவிக்க உள்ள ஆஃபர் மூலம் சந்தையில் புதிய விலை போர் துவங்க உள்ளது. ஆனால் மக்களுக்கு இது மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும்.

கேஷ்பேக் 
ஜியோ நிறுவனத்தின் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் 3 மாதத்திற்கு 399 ரூபாய் ரீசார்ஜ் செய்யும்போதும் அவர்களுக்கு முழுமையாகக் கேஷ்பேக் அளிக்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. 
இதன் மூலம் இன்னும் 3 மாதம் ஜியோ வாடிக்கையாளர்கள் இலவசமாக இண்டர்நெட் மற்றும் வாய்ஸ் கால் சேவையைப் பயன்படுத்தலாம். 

8 கூப்பன் 
ஆனால் இந்தக் கேஷ்பேக்-ஐ கூப்பன் வடிவில் அளிக்க உள்ளது. 399 ரூபாயை 50 ரூபாய் வீதம் 8 கூப்பனாக வாடிக்கையாளர்களுக்கு அளிக்க உள்ளது. 
இதைப் பயன்படுத்தி அடுத்தடுத்த ரீசார்ஜ்களில் வாடிக்கையாளர்கள் பயன்பெறலாம். 

இன்று அறிவிப்பு 
ஜியோவின் தீபாவளி ஆஃபர் குறித்த அறிவிப்பு இன்று காலையில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  
ஏர்டெல் 
நேற்று நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் ஜியோவிற்குப் போட்டியாகக் கார்பன் நிறுவனத்துடன் இணைந்து 1,399 ரூபாய்க்கு ஸ்மார்ட்போன் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. 
இது ஜியோவின் 1,500 ரூபாய் விலையை விடவும் குறைவு என்பது மட்டுமல்லாமல் ஜியோ வழங்குவது வெறும் ப்யூச்சர் போன், ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போன் வழங்குவதாகத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

கார்பன் 
கார்பன் நிறுவனத்தின் தயாரிப்பான ஏ40 ஸ்மார்போன் 3,499 ரூபாயாக இருக்கும் நிலையில் இதனை 2,899 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 
வாடிக்கையாளர்கள் 2,899 ரூபாய்க்கு கார்பன் ஏ40 ஸ்மார்போன் வாங்கினால் 1,500 ரூபாய் கேஷ்பேக் வழங்கப்பட உள்ளதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது. 

போட்டி 
ஜியோ போனுக்குப் போட்டியாக ஏர்டெல் நிறுவனமும் குறைந்தவிலையில் ஸ்மார்ட்போன் விற்பனையை அறிவித்துள்ள நிலையில், தற்போது ஜியோ தீபாவளி ஆஃபரை அறிவித்து மக்களைக் குஷிப்படுத்தியும், ஏர்டெல் நிறுவனத்திற்கு அதிர்ச்சியையும் அளித்துள்ளது. 
  

சாதகமான டிராய் அறிவிப்பு.. 
IUC என கூறப்படும் இண்டர்கனெக்ஷன் சார்ஜ் அளவீடுகளை இந்திய டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் இருந்து 14 பைசாவில் இருந்து 6 பைசாவாக குறைத்துள்ளது. இப்புதிய கட்டணம் அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்தது. 
  

எதிர்ப்புகள் 
இந்திய டெலிகாம் சந்தையில் புதிய நிறுவனங்களுக்கு நன்மை அளிக்கும் வரையில் IUC கட்டணத்தை குறைக்க ஜியோ டிராய் அமைப்பிடம் வலியுறுத்திய நிலையில் ஏர்டெல், வோடாபோன், ஐடியா ஆகிய நிறுவனங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது. 
இருப்பினும் டிராய் அமைப்பு பல கட்ட ஆலோசனைக்கு பின்பு இக்கட்டணத்தை 50 சதவீதத்திற்கும் அதிகமாக குறைத்தது. 

IUC என்றால் என்ன..? 
ஜியோ சேவையை பயன்படுத்தும் ஒருவர் ஏர்டெல் சேவையை பயன்படுத்தும் ஒருவருக்கு அழைத்தால், அழைப்பை இணைப்பதற்காக ஒரு நிமிடத்திற்கு ஜியோ, ஏட்டெல் நிறுவனத்திற்கு 14 பைசா கொண்டுக்க வேண்டும். 
இந்த கட்டணம் தான் தற்போது 6 பைசாவாக குறைந்துள்ளது

No comments:

Post a Comment