www.asiriyar.net

Monday, 9 October 2017

அனைத்து அரசு பள்ளிகளிலும், ஒன்பது வாரம், சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்த, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பு, செப்.,ல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தியது. அதனால், பள்ளிகள் இயங்காமல் பாதிக்கப்பட்டன. பல பள்ளிகள் திறந்திருந்தாலும், தலைமை  ஆசிரியர் முதல், வகுப்பு ஆசிரியர் வரை,'ஸ்டிரைக்'கில் பங்கேற்றதால், வகுப்புகள்  நடைபெறவில்லை.


இந்நிலையில், ஆசிரியர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நாட்களை ஈடுகட்டி, வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இம்மாதம் முதல், டிச., வரை, ஒன்பது சனிக்கிழமைகளில் பள்ளிகளை நடத்த வேண்டும் என, பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகள், உத்தரவிட்டு உள்ளனர்.

No comments:

Post a Comment