www.asiriyar.net

Friday 6 October 2017

ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் பள்ளிகள் நியமித்துக் கொள்ளலாம் - அமைச்சர் செங்கோட்டையன்

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் கடந்த 7 ஆண்டுகளாக ஆசிரியர் பணி நிரப்பப்படாமல் உள்ளதே? வட மாவட்டங்களில் ஏறத்தாழ 900க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் தேவை உள்ளது. அந்தந்த பகுதியில் உள்ளவர்களை தற்காலிகமாக நியமித்துக் கொள்ளலாம். அவர்களுக்கு 7500 மாத சம்பளம் வழங்கலாம். அதற்கான நிதியை ஒதுக்க முடிவு செய்துள்ளோம். 

முதுநிலை ஆசிரியர்கள் போட்டித் தேர்வில் நிறைய பேர் தேர்ச்சி பெற்றிருந்தும், பலருக்கு ஆசிரியர் பணியாற்றிய அனுபவம் இருந்தும் அதற்கான மதிப்பெண் வழங்காத நிலை உள்ளதே? இரண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கின்றன. ஒன்று வெயிட்டேஜ். மற்றொன்று அவரின் கல்வித் தகுதி. மூன்றாவதாக தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது என்பது அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் நியமித்துள்ளோம்.

அவர்கள் வாரத்துக்கு 2 அல்லது 3 நாட்கள்தான் பணியாற்ற வேண்டும். அதனால் மதிப்பெண் வழங்கும் போது ஏற்காமல் இருக்கலாம். ஐசிடி பற்றி கூறினீர்கள். அதற்கான பணி எப்போது தொடங்கும்? அடுத்த வாரம் அதற்கான டெண்டர் குளோபல் முறையில் நடக்கும். இனி பள்ளிக் கல்வித்துறையில் எதுவாக இருந்தாலும் குளோபல் டெண்டர் மூலம்தான் நடக்கும். 3 ஐஏஎஸ் அதிகாரிகள் டெண்டர்களை முடிவு செய்வார்கள். 

அதன்பிறகு அந்த பட்டியல் அமைச்சரின் கவனத்துக்கு வரும். நவம்பர் மாத இறுதிக்குள் இதற்கான பணிகள் முடியும். புத்தகம் வாங்குவதில் 10 சதவீதம் கமிஷன் கேட்பதாக பதிப்பாளர்கள் தரப்பில் கூறப்படுகிறதே? என்னைப் பொறுத்தவரையில் பதிப்பாளர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப புத்தகங்களை தள்ளிவிடப் பார்க்கிறார்கள். 

கல்வி தொடர்பான புத்தகங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்பது என் நோக்கம். அதனால் நிதியை நிறுத்தி வைத்துள்ளோம். மாணவர்களுக்கு பயிற்சி எப்போது தொடங்கும்? இந்த மாத இறுதிக்குள் வீடியோ கான்பரன்சிங் மூலம் கேள்வி பதில் வெளியிடப்படும். அதை மாணவர்கள் பதிவு செய்து கொள்ளலாம். செல்போன் மூலமும் வெளியிட உள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment