www.asiriyar.net

Sunday, 8 October 2017

பிரதமர் புகைப்படங்களை பள்ளியில் வைக்க உத்தரவு

'பள்ளிகளில், ஜனாதிபதி பிரதமர் புகைப்படங்களை வைத்திருக்க வேண்டும்' என கோவா அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவாவில், முதல்வர் மனோகர் பரீக்கர் தலைமையிலான பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. பனாஜியில் மாநில கல்வித்துறை உயரதிகாரிஒருவர் கூறியதாவது:

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் பள்ளிகளில், மகாத்மா காந்தி, அம்பேத்கர், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரது புகைப்படங்களை கண்டிப்பாக வைத்திருக்கும் படி உத்தர விட்டுள்ளது. இவர்களை பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
என்பதற்காக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் பெயர்கள் கூட தெரியாமல் குழந்தைகள் உள்ளனர். இதையடுத்து கோவாவில் அரசு மற்றும் அரசு நிதியுதவியுடன் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும் ஜனாதிபதி,பிரதமர் புகைப்படங்களை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment