www.asiriyar.net

Saturday 28 October 2017

'நீட்' தேர்வு பயிற்சிக்கு பதிவு அவகாசம் நீட்டிப்பு

அரசு பள்ளி மாணவர்கள், 'நீட்' பயிற்சிக்கு பதிவு செய்வதற்கான அவகாசம், அக்., 31 வரை நீட்டிக்கப் பட்டு உள்ளது.

பிளஸ் ௨ முடித்த மாணவர்கள், உயர் கல்வியில் சேர, மத்திய அரசு, பல்வேறு நுழைவுத் தேர்வுகள் நடத்துகிறது. இவற்றில், மருத்துவத்துக்கான, நீட்; இன்ஜினியரிங்குக்கான, ஜே.இ.இ., ஆகிய தேர்வுகளில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம், ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் போன்ற, மாநில பாடத்திட்ட மாணவர்கள், அதிகம் தேர்ச்சி பெறுகின்றனர்.

இந்நிலையில், நீட், ஜே.இ.இ., தேர்வுகளில், தமிழக மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெற, பிளஸ் ௨ மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டத்தை, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இதன்படி, 'ஸ்பீட்' என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து, 20 கோடி ரூபாய் செலவில், 'நீட்' தேர்வுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின், http://tnschools.gov.in என்ற இணையதளத்தில், மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மூலம், அக்., 26 வரை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், 'ஆன் - லைன்' பதிவு அவகாசத்தை, அக்., 31 வரை நீட்டித்து, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் உத்தரவிட்டு உள்ளார்.

No comments:

Post a Comment