www.asiriyar.net

Tuesday 3 October 2017

மாண்புமிகு தமிழகத் துணை முதல்வர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களை தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் நேரில் சந்தித்து -மனு

மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மாண்புமிகு அமைச்சர்  திரு. கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள், பள்ளி கல்வி மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் தமிழ்நாடு, தமிழக அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை சர்வதேச கல்வித் தரத்திற்கு இணையாக கொண்டு செல்லும் முழு முயற்சியாக கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பக் கல்வியை 3 முதல் 10 வகுப்பு வரை கொண்டு வருவதாக அரசின் கொள்கை முடிவில் கூறப்பட்டுள்ளது. 



இதனைக் கொண்டுவந்தமைக்காக மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் , உயர்திரு பள்ளிக்கல்வி செயலாளர் அவர்கள், பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் அவர்களுக்கும், 40,000-கும் மேற்பட்ட பி.எட்., கணினி ஆசிரியர்கள் சார்பிலும், தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பிலும்,  அரசு பள்ளிகளில் பயிலும் கோடிக்கணக்கான ஏழை, எளிய மாணவர்களின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

வாழ்வாதார கோரிக்கைகள்...

1) அண்டை மாநிலங்களில் உள்ளது போல், அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை நிகழ் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே ஆறாவது கட்டாயப் பாடமாக பாடமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

2) புதிய பாடத்திட்டத்தில் கட்டாயமாகும் கணினி அறிவியல் பாடத்தை மாணவர்களுக்கு முறையாக பயிற்றுவிக்க பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கிட வேண்டும்.

 3) கணினி இன்றியமையாத இன்றைய சூழலில் தொடக்க (1-5), நடுநிலை (6-8), உயர்நிலை (9-10), மேல்நிலை (11-12) பள்ளிகளுக்கு குறைந்தது ஒரு பி.எட். படித்த கணினி ஆசிரியரை தமிழக அரசு நியமனம் செய்திட வேண்டும்.

 அரசு பள்ளிகளில் கணினி  அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்தினால், தமிழகத்தில் வாழும் கோடிக்கணக்கான கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறுவதுடன், கணினி அறிவியலில் பி.எட்., பட்டம் பெற்ற ஆயிரக்கணக்கான வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் பயன்பெறுவர்.

கணினி அறிவியலின் முன்னேற்றத்திற்காக நீண்ட வருடங்களாக போராடிக்கொண்டிருக்கும் எங்களுடைய வாழ்வாதாரக் கோரிக்கைகளை தாங்கள் பரிசீலனை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

வெ.குமரேசன்,
9626545446 ,
மாநிலப் பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் 655/2014.

No comments:

Post a Comment